காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகர்கோவிலில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கினார். தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். முன்னதாக உண்ணாவிரத பந்தலில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அமைச்சர் மாபா.பாண்டியராஜன், விஜயகுமார் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தியபிறகு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
போராட்டத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் பேசியதாவது:-
குமரி மாவட்டத்தில் சில கட்சிகள் சாதியை நம்பியும், சில கட்சிகள் மதத்தை நம்பியும் அரசியல் செய்கின்றன. ஆனால் சாதி, மதம் ஆகிய இரண்டையும் தாண்டி மனிதநேயத்தை கொண்டு செயல்படுகிற கட்சி அ.தி.மு.க. மட்டும்தான். அதற்கு உதாரணமாகத்தான் சாதி, மதங்களை கடந்து இந்த போராட்டத்தில் நாம் அனைவரும் கூடியிருக்கிறோம். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கியை போன்று ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச்சென்று கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 6 தொகுதிகளையும் இந்த மாவட்டத்தில் இழந்தது. ஒரு காலத்தில் இந்த மாவட்டம் அ.தி.மு.க. முதல்நிலை கட்சியாக இருந்தது. அந்த நிலையை மீண்டும் கொண்டுவர எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செயல்படுகிறார்கள். அதற்கான வியூகங்களும், உத்திகளும் வகுக்கப்பட்டு வருகிறது. மீண்டும் குமரி மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக மாறும். அதற்கான அங்கீகாரமாகத்தான் இந்த போராட்டத்தில் திரண்டிருக்கும் கூட்டத்தை பார்க்கிறேன்.
குமரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் அனைத்திலும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறும் நிலை இருக்கிறது. ஒரு அதிகாரியை 6 எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து மிரட்டுகிறார்கள் என்றால் அதன்மூலம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் வெளிப்படுகிறது. கூட்டுறவு தேர்தல் குறித்து குற்றச்சாட்டு கூற தி.மு.க.வுக்கு தார்மீக உரிமை கிடையாது. நீண்டகாலமாக கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தலே நடத்தாமல் இருந்தவர்கள் அவர்கள்.
காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவை குறைத்து 177 டி.எம்.சி.யாக வழங்க உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அந்த தீர்ப்பில் ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் நதி அந்த மாநிலத்துக்கு மட்டுமே சொந்தம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு ஏற்று காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு கட்டமைப்புகளை உடனே அமைக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் காங்கிரஸ், பா.ஜனதா இரண்டுமே தயக்கம் காட்டுகின்றன. இந்த கருத்தை இரண்டு தேசிய கட்சிகளும் வேர்பிடித்துள்ள குமரி மாவட்டத்தில் கூறுவது சரியாக இருக்கும் என கருதுகிறேன். காங்கிரஸ் கட்சி போலித்தனமாக செயல்படுகிறது. அவர்களுக்கு உண்மையாகவே உணர்வு இருக்குமானால் இந்த பிரச்சினைக்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் ஏன் உண்ணாவிரதம் இருக்கவில்லை. தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டும்தான்.
இவ்வாறு அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறினார்.
உண்ணாவிரதத்தில் மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல் ஞானசேகர், மாநில சிறுபான்மைப்பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம், மாவட்ட பால்வளத்தலைவர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்கிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை தலைவர் கனகராஜன், மாணவர் அணி மனோகரன், வக்கீல்கள் குரூஸ் செலின் ராணி, கனகராஜன், சந்தோஷ்குமார், அகஸ்டின், விக்னேஷ், மீனாட்சி, லட்சுமிகாந்த் மற்றும் சதானந்தன், கோட்டார் கிருஷ்ணன், மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, பத்மதாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடந்தது.

Related Tags :
Next Story