ஜூகு கடற்கரையில் பயோ கழிவறை அமைக்க நடிகர் அக்ஷய் குமார் உதவி


ஜூகு கடற்கரையில் பயோ கழிவறை அமைக்க நடிகர் அக்ஷய் குமார் உதவி
x
தினத்தந்தி 4 April 2018 4:07 AM IST (Updated: 4 April 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி டிவிங்கிள் கன்னா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் டுவிட்டரில் கருத்து ஒன்றை கூறியிருந்தார்.

மும்பை,

பொதுமக்கள் ஜூகு கடற்கரையில் திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் தனது நடைபயிற்சியை கெடுத்து விடுவதாக கூறியிருந்தார். மேலும் அதுகுறித்த படத்தையும் பதிவேற்றம் செய்து இருந்தார். இந்தநிலையில் ஜூகு கடற்கரையில் புதிய பயோ கழிவறை அமைக்க நடிகர் அக்ஷய் குமார் ஏற்பாடு செய்துள்ளார். புதிய கழிவறைக்காக அவர் ரூ.10 லட்சம் நிதிஉதவி அளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இது பயோ கழிவறை என்பதால் இதனால் கடற்கரையில் துர்நாற்றம் ஏற்படாது. இந்த கழிவறை கடற்கரைக்கு வருபவர்கள் மட்டும் இன்றி அதை சுற்றி உள்ள குடிசை பகுதி மக்களுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும்’’ என்றார்.

Next Story