நில முறைகேடு தொடர்பாக மந்திரி சுபாஷ் தேசாயை பதவி நீக்கம் செய்ய வேண்டும்


நில முறைகேடு தொடர்பாக மந்திரி சுபாஷ் தேசாயை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 4 April 2018 4:21 AM IST (Updated: 4 April 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

நிலமுறைகேட்டில் ஈடுபட்டுள்ள மந்திரி சுபாஷ் தேசாயை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் வலியுறுத்தினார்.

மும்பை,

தொழிற்சாலைகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் வேறு பயன்பாட்டுக்காக மாற்றி கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் கடைசியில் தாக்கல் செய்யப்பட்ட பாக்சி கமிட்டி அறிக்கையின்படி 2015-17-ம் ஆண்டுகளில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 14 ஆயிரத்து 219 ஹெக்டேர் நிலம் மற்ற பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டு உள் ளது. இதில் மும்பையை சேர்ந்த சில தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கும் நிலம் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன்மூலம் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த முறைகேடு மூலம் அவர் தொழில்துறை மந்திரி பொறுப்பில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டர். எனவே சுபாஷ் தேசாயை மந்திரி பதவியில் இருந்து நீக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story