காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஈரோடு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஈரோட்டில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் ஆதாரமாக காவிரி தண்ணீர் விளங்குவதால் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் குரல் எழுப்பி வருகின்றனர். மாநில அரசு சார்பிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால், ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 18 நாட்களாக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு சபையை முடக்கினார்கள். தமிழக அரசு சார்பிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க.வினர் பொதுமக்களுடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இந்த போராட்டத்துக்கு ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சம் பொதுமக்கள் ஆதரவு கொடுத்து உள்ளனர். மேலும், இந்த அறப்போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்களும் கடைஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே ஒட்டு மொத்த தமிழகமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
உண்ணாவிரத போராட்டத்தையொட்டி வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 8 மணிஅளவில் போராட்டம் தொடங்கியது. அப்போது இருந்தே கட்சியினர் திரளாக வரத்தொடங்கினார்கள். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பஸ் நிறுத்தத்தில் இருந்து முனியப்பன் கோவில் வரை இருக்கைகள் போடப்பட்டன. மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு வாகனங்களில் தொண்டர்கள் திரண்டதால் முழுமையாக பந்தல் அமைக்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால் கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பஸ், வேன், கார்கள் என பல்வேறு வாகனங்களில் கட்சியினர் வந்ததால் ஈரோடு சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, எஸ்.ஈஸ்வரன், இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்துரவிச்சந்திரன், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் ஆர்.மனோகரன், ஜெயராஜ், முருகுசேகர், கோவிந்தராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் நந்தகோபால், ஜெயராமன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி செயலாளர் கேபிள்ரமேஷ் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story