கோவையில் பரபரப்பு ஏற்படுத்திய வழக்கில் தீர்ப்பு: கஞ்சா தகராறில் வாலிபரை குத்திக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவையில் கஞ்சா தகராறு வழக்கில் வாலிபரை குத்திக் கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோவை,
கோவை கணபதி கணேசன் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் பெர்னாண்டஸ்(வயது 26). கணபதி திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் சவுந்தர் என்கிற சவுந்தர்ராஜன்(31). கணபதி மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் விஷ்ணு என்கிற சிவா விஷ்ணு(31). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். வேலைக்கு செல்லாமல் கஞ்சா விற்பதும் மாலையில் கஞ்சா குடித்து தகராறு செய்வதும் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ஒரு நாள் பெர்னாண்டஸ் கஞ்சா குடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சவுந்தர்ராஜனும், சிவா விஷ்ணுவும் சென்று கஞ்சா கேட்டனர். அதற்கு பெர்னாண்டஸ் எப்போது பார்த்தாலும் ஓசியில் கஞ்சா வாங்குகிறீர்களே என்று கூறி திட்டினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பெர்னாண்டசை கொலை செய்ய நண்பர்கள் 2 பேரும் திட்டம் தீட்டினார்கள்.
இந்த நிலையில் 2.10.2005 அன்று மாலை 6 மணியளவில் சவுந்தர்ராஜனும், சிவா விஷ்ணுவும் சேர்ந்து வாலிபர் பெர்னாண்டசை கொலை செய்யும் நோக்கத்தில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள தங்கம்மாள் நகரில் உள்ள ஒரு தனியார் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சவுந்தர்ராஜனும், சிவா விஷ்ணுவும் சேர்ந்து பெர்னாண்டசை கத்தியால் குத்தினார்கள். பின்னர் அவரது கழுத்தை ஆக்சா பிளேடால் அறுத்தனர். இதில் பெர்னாண்டஸ் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவரது உடலை அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில் தூக்கி போட்டனர். பின்னர் அங்கிருந்த குப்பை கூளங்களையும் பிணத்தின் மீது போட்டு மறைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
அந்த கிணறு பாழடைந்த கிணறு என்பதால் அதில் எப்போதும் துர்நாற்றம் வீசும். இதனால் பெர்னாண்டசின் பிணம் அழுகிய போதிலும் அதுபற்றி அந்த பகுதி மக்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. பெர்னாண்டசின் தாயார் ராஜாத்தி அம்மாளும் தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுக்கவில்லை. அதற்கு காரணம் பெர்னாண்டஸ் அடிக்கடி கஞ்சா விற்கும் வழக்கில் சிறைக்கு சென்று விடுவதால் ஆண்டு கணக்கில் வீட்டுக்கு வரமாட்டார். இதனால் மகன் பெர்னாண்டஸ் வீட்டுக்கு வராததை அவரது தாயார் பெரிதாக நினைக்கவில்லை.
இந்த நிலையில் மகன் வீட்டுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகி விட்டது. எனவே அது பற்றி போலீசில் புகார் கொடுக்குமாறு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறினார்கள். இதைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு சரவணம்பட்டி போலீசில் தனது மகன் பெர்னாண்டஸ் காணவில்லை என்று கூறி ராஜாத்தி அம்மாள் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து போலீசார் காணவில்லை என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகும் பெர்னாண்டசின் கதி என்ன என்று தெரியவில்லை.
இதற்கிடையில் 2013-ம் ஆண்டு சரவணம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை சிலர் கொலை செய்ய முயன்றனர். இந்த கொலை முயற்சி வழக்கில் சவுந்தர்ராஜன் மற்றும் சிவா விஷ்ணு உள்பட சிலர் போலீசாரிடம் சிக்கினார்கள். இதுதொடர்பாக ஆறுமுகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர், ‘நானும் சவுந்தர்ராஜனும் சிறையில் ஒன்றாக இருந்துள்ளோம். அப்போது, சவுந்தர்ராஜனும், சிவாவிஷ்ணுவும் சேர்ந்து பெர்னாண்டஸ் என்பவரை கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசி விட்டதாகவும் அது இதுவரை யாருக்கும் தெரியாது. போலீசாரும் எங்களை பிடிக்கவில்லை என்று தன்னிடம் கூறியதாக ஆறுமுகம் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அப்போதைய உதவி கமிஷனர் சுரேஷ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் உடனடியாக பெர்னாண்டஸ் காணாமல் போன வழக்கு தொடர்பாக சவுந்தர்ராஜன் மற்றும், சிவாவிஷ்ணுவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதில் இவர்கள் 2 பேரும் பெர்னாண்டசை கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பிணத்தை வீசிய கிணற்றை அவர்கள் 2 பேரும் சேர்ந்து அடையாளம் காட்டினார்கள். ஆனால் கிணற்றை சுற்றி உள்ள இடம் முழுவதும் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து கொலையாளிகள் அடையாளம் காட்டிய இடத்தில் போலீசார் தோண்டினார்கள். ரூ.9 லட்சம் செலவு செய்து 35 நாட்களாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் 110 அடி ஆழம் தோண்டப்பட்டது. கடும் போராட்டத்துக்கு பிறகு 14.2.2014 அன்று ஒரு மண்டை ஓடு, இடுப்பு எலும்பு மற்றும் தொடை எலும்பு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. அந்த எலும்பை கொண்டு சூப்பர் இம்போசிங் செய்தும், டி.என்.ஏ. சோதனை மூலமும் அந்த எலும்புகள் பெர்னாண்டசின் உடலில் உள்ளது என்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெர்னாண்டஸ் கொலை தொடர்பாக சவுந்தர்ராஜன், சிவாவிஷ்ணு ஆகியோரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 302(கொலை), 120-பி(கூட்டுச்சதி) 201(தடயத்தை மறைத்தல்)ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மொத்தம் 37 சாட்சிகள், 54 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.பெர்னாண்டஸ் கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சவுந்தர்ராஜன் மற்றும் சிவாவிஷ்ணு ஆகியோருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தலா ஒரு ஆயுள் தண்டனையும், 201 பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி செந்தில்குமார் தீர்ப்பு கூறினார். இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரும் ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்கள்.

Related Tags :
Next Story