சந்தையூர் சுவர் பிரச்சினையில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டம்
சந்தையூர் சுவர் பிரச்சினையில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
மதுரை,
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சந்தையூரில் ஒரு பிரிவினரின் சார்பில் தடுப்புச்சுவர் கடந்த 2013-ல் கட்டப்பட்டது. இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து சுவரை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள மலையில் குடியேறும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மலையில் குடியேறி போராட்டம் நடத்திய அதேபகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிமுருகன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மயங்கி விழுந்து இறந்தார்.
அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால், உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்த பழனி முருகனின் உடல், மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சந்தையூரில் சர்ச்சைக்குரிய சுவற்றை அகற்றும்வரை பழனிமுரு கனின் உடலை வாங்குவதில்லை என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில் 6-வது நாளாக உடலை வாங்க மறுத்து ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, புரட்சி புலிகள், மக்கள் விடுதலை மீட்பு இயக்கம், தமிழ்ப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆதித்தமிழர் கட்சி தலைவர் கு.ஜக்கையன் தலைமையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்புள்ள பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில நிதி செயலாளர் விடுதலை வீரன், ஆதித்தமிழர் பேரவை நிர்வாகி தலித்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து கு.ஜக்கையன் உள்பட போராட்டக்குழுவினரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர். அங்கு கலெக்டர் வீரராகவராவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுவரை இடிப்பது தொடர்பாகவும், இறந்த பழனிமுருகனின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் தொடர்பாகவும் தீர்வு எட்டப்படவில்லை என தெரிகிறது. இதனால் அவர்கள் பழனிமுருகன் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

Related Tags :
Next Story