காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மேலூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மேலூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 April 2018 4:15 AM IST (Updated: 5 April 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மேலூரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தது.

மேலூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க கோரியும் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலூரில் உள்ள கக்கன் சிலையில் இருந்து ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலூர் நகர செயலாளர் முகமதுயாசின் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒத்தக்கடை ரகுபதி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில செயலாளர் கலைமணி அம்பலம், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மாரநாடு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் ஆற்றலரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story