காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தஞ்சையில், ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் தடுத்ததால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சையில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் துரைமாணிக்கம் ஆகியோர் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் மத்திய, மாநில அரசுகள் பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பி திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக சென்னை செல்வதற்காக வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர்.
போலீசார் தடுத்ததால் சாலைமறியல்
அப்போது வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே சுமார் 10 நிமிடம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் உள்ளே விடாமல் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ரெயில் நிலையம் எதிரே செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டனர்.
75 பேர் கைது
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உட்பட 75 பேரை போலீசார் கைது செய்து தஞ்சையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம், தி.மு.க. நகரசெயலாளர் நீலமேகம், முன்னாள் மாவட்ட பொருப்பாளர் செல்வம், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், நகர அவைத்தலைவர் ஆறுமுகம், தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங், பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மண்டல செயலாளர் அய்யனார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் திருஞானம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், நிர்வாகி முத்துக்குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சொக்காரவி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், ஆட்டோ தொழிற்சங்கம் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story