போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் பொருட்கள் திருட்டு
புதுக்கோட்டையில் உள்ள போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையை சேர்ந்தவர் பொன்.இளங்கோ (வயது 34). அவர் மேலராஜ வீதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு ஸ்டூடியோவை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை திறக்க வந்த போது, ஸ்டூடியோவின் ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 3 கேமிராக்கள், லென்ஸ், பிளாஸ் உள்பட பல்வேறு பொருட்கள் திருட்டு போயிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இந்த திருட்டு சம்பவம் குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசில் பொன்.இளங்கோ புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story