காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,
காவிரிநீர் பங்கீட்டில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதை, தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழகத்தில் அடுத்தடுத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் அருள் தலைமையில் கட்சியினர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து பெரம்பலூர் கடைவீதியிலுள்ள தலைமை தபால் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கடைவீதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தின் போது, கர்நாடகா சட்டசபை தேர்தலை முன்னிலைப்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு காவிரி பிரச்சினையில் தமிழகத்தை வஞ்சித்து விட்டது. தமிழகத்திற்கு காவிரி தண்ணீரின் அளவை குறைத்து வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டதே விவசாயிகளுக்கு ஏமாற்றமானது தான். அந்த வகையில், காவிரி மேலாண்மை வாரியமும் அமைக்கப்படவில்லை எனில் தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீரின்றி கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். இந்நிலையில் மத்திய அரசும் இந்த விவகாரத்தில் 3 மாத கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்திருப்பது காலம் தாழ்த்துவதற்கான அச்சாரம் போல் இருக்கிறது. எனவே மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழக உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர். சாலை மறியல் போராட்டம் நடத்திய பெரம்பலூர் தொகுதி செயலாளர் அருண்குமார், குன்னம் தொகுதி செயலாளர் அருள்அய்யா, ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன் (வேப்பூர்), ஜெயபிரகாஷ் (ஆலத்தூர்), முத்துகுமார் (பெரம்பலூர்), பெரியசாமி (வேப்பந்தட்டை), ராயர் (செந்துறை) உள்பட நாம் தமிழர் கட்சியினர் 30 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து அங்கு உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.

Related Tags :
Next Story