பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்கு கூட்டம் சேராததால் ஈசுவரப்பா மீது அமித்ஷா கடும் அதிருப்தி


பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்கு கூட்டம் சேராததால் ஈசுவரப்பா மீது அமித்ஷா கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 5 April 2018 3:45 AM IST (Updated: 5 April 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்கு கூட்டம் சேராததால் ஈசுவரப்பா மீது அமித்ஷா கடும் அதிருப்தியடைந்தார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா சார்பில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநாடு காகினெலேயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். மாநாட்டில் தொண்டர்கள் அமர 1 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு தொண்டர்கள் கூட்டம் மாநாட்டில் சேரவில்லை.ஆங்காங்கே நாற்காலிகள் காலியாக இருந்தன. மாநாட்டில் கூட்டம் குறைவாக இருந்தது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இதனால் தேர்தல் நேரத்தில் பா.ஜனதா இக்கட்டான நிலையில் சிக்கி உள்ளது.

இதனால் அமித்ஷா கடும் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்தார். பா.ஜனதாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் தலைவராக ஈசுவரப்பா உள்ளார். அந்த மாநாடு ஏற்பாட்டு பணிகளையும் அவரே மேற்கொண்டார். இதனால் ஈசுவரப்பா மீது அமித்ஷா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ஜனதாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் முன்னணி தலைவராக இருக்கும் தாங்கள், ஒரு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியவில்லை. உங்களை எப்படி பலம் வாய்ந்த தலைவராக அழைப்பது என்று ஈசுவரப்பா மீது அமித்ஷா கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Next Story