காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி புதுவையில் தி.மு.க. தலைமையில் ரெயில் மறியல், 1000 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி புதுவையில் தி.மு.க. தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும் தொடர் போராட்டங்களை நடத்துவது என தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முதல்கட்டமாக நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதற்காக தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சுப்பையா சாலையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா அருகே கூடினார்கள். இன்னும் சிலர் புல்லுக்கடை சந்து அருகே திரண்டனர். அங்கிருந்து அவர்கள் காலை 10.45 மணிக்கு வாணரப்பேட்டை ரெயில்வே கேட் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். தி.மு.க. மாநில அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
ஊர்வலம் புல்லுக்கடை சந்து அருகே வந்தபோது அங்கிருந்தவர்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் நேராக வாணரப்பேட்டை ரெயில்வே கேட் பகுதிக்கு சென்று தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகள் ரெயில் வந்தது. இதைப்பார்த்ததும் அந்த ரெயிலை நோக்கி கட்சிக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சென்றனர். இதனால் அந்த ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது.
அங்கிருந்த சிலர் ரெயில் என்ஜின் மீது ஏறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கிடையே புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து அவுராவுக்கு புறப்பட்ட ரெயில் முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் தலைமையில் ஒரு குழுவினர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரெயிலில் இருந்த பயணிகள் நடு வழியிலேயே இறங்கிச் சென்றனர். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என ஒரு சிலர் மட்டும் ரெயிலில் அமர்ந்து இருந்தனர்.
இந்த ரெயில் மறியல் போராட்டம் 30 நிமிடத்துக்கும் மேலாக நீடித்தது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மாநில இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவபொழிலன், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, படைப்பாளி மக்கள் மக்கள் தலைவர் தங்கம் உள்பட சுமார் 1000 பேர் கைது செய்யப்பட்ட னர். அவர்கள் அனைவரும் கரிக்குடோனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக் கொழுந்து, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதே கோரிக்கையை நிறைவேற்றக் கோரி புதுவை சட்டக்கல்லூரி மாணவர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்த அவர்கள் நேராக புதுவை ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலின் என்ஜின் மீது ஏறி நின்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story