மத்திய ரெயில்வே ரெயில் நிலையங்களில் 318 புதிய தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் அதிகாரி தகவல்


மத்திய ரெயில்வே ரெயில் நிலையங்களில் 318 புதிய தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 5 April 2018 4:33 AM IST (Updated: 5 April 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

318 புதிய தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக மேலாளர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மத்திய ரெயில்வே ரெயில் நிலையங்களில் 318 புதிய தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் வைக்கப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே மும்பை கோட்ட மேலாளர் கூறினார்.

மும்பையில் மத்திய ரெயில்வே சார்பில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகளை தினசரி சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் கவுன்ட்டர்களில் கால் கடுக்க வரிசையில் நின்று டிக்கெட் எடுப்பதை தவிர்ப்பதற்காக தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் (ஏ.டி.வி.எம்.) வைக்கப்பட்டு உள்ளன. ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பயணிகள் மின்சார ரெயில் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் எடுத்து பயணித்து வருகின்றனர்.

மத்திய ரெயில்வே ரெயில் நிலையங்களில் மொத்தம் 600-க்கும் மேற்பட்ட தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவற்றில் பல தொழில்நுட்ப கோளாறு மற்றும் சேதமடைந் ததன் காரணமாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன.

இந்தநிலையில், புதிய தானியங்கி டிக்கெட் எந்திரங்களை வைக்க மத்திய ரெயில்வே முடிவு செய்து உள்ளது. இதுபற்றி மத்திய ரெயில்வேயின் மும்பை கோட்ட மேலாளர் எஸ்.கே.ஜெயின் கூறுகையில், ‘மத்திய ரெயில்வே ரெயில் நிலையங்களில் புதிதாக 318 தானியங்கி டிக்கெட் எந்திரங்கள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 72 புதிய எந்திரங்கள் வந்துள்ளன.

அவை ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 10 உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. மற்றவை இன்னும் சில நாட்களில் பயன்பாட்டிற்கு வந்து விடும்’ என்றார்.

Next Story