படகு குழாமில் விபத்து தண்ணீரில் மூழ்கி சிறுமி பலி


படகு குழாமில் விபத்து தண்ணீரில் மூழ்கி சிறுமி பலி
x
தினத்தந்தி 5 April 2018 4:46 AM IST (Updated: 5 April 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

படகு குழாமில் நடந்த விபத்தில் தண்ணீரில் மூழ்கி சிறுமி பலியானர்.

மும்பை,

மும்பையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சிவபிரசாத் ஷெட்டி. இவர் தனது மனைவி மற்றும் மகள் அன்விதா ஷெட்டி(வயது2) ஆகியோருடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றார். இவர்கள் அனைவரும் ஆலப்புழாவில் உள்ள படகு குழாமுக்கு சென்றிருந்தனர். அங்கு படகில் உல்லாச சவாரி மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அன்விதா ஷெட்டி ஆற்றுக்குள் தவறி விழுந்தாள். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவளது தந்தை சிவபிரசாத் ஷெட்டி ஆற்றில் குதித்து மகளை மீட்க முயன்றார். ஆனால் அதற்குள்ளாக சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து படகுகுழாமில் இருந்தவர்கள் அன்விதா ஷெட்டியின் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோரின் கண்முன்னே குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story