பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாற விரும்பும் பெண் போலீஸ் முதல்-மந்திரி அனுமதி அளிப்பாரா?
ஆணாக மாற விரும்பும் பெண் போலீஸ்-க்கு முதல்-மந்திரி அனுமதி அளிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.
பீட்,
ஆணாக மாற விரும்பும் பெண் போலீசின் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அனுமதி அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பீட் மாவட்டம் மஜல்காவ் போலீஸ் நிலையத்தில் போலீசாக இருப்பவர் லலிதா சால்வே(வயது29). இவர் மும்பை ஜே.ஜே.ஆஸ்பத்திரியில் செய்த பரிசோதனையில் அவரது உடலில் ஆண் தன்மை இருப்பதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாற முடிவு செய்தார்.
இதற்காக அவர் பீட் மாவட்ட காவல் துறை நிர்வாகத்திடம் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதிக்கக்கோரி, அதற்கு ஒரு மாதம் மருத்துவ விடுப்பு கேட்டார். ஆனால் ஆண் போலீசாருக்கான உயரம், எடை போன்ற அடிப்படை உடல் தகுதிகள் பெண் போலீசிடம் இருந்து வேறுபட்டது என கூறி மாவட்ட போலீஸ் நிர்வாகம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்தது.
இதையடுத்து அவர், தனது பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிடுமாறு கடந்த நவம்பர் மாதம் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இது நிர்வாகம் தொடர்பான பிரச்சினை என்பதால் மராட்டிய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையிடுமாறு அவரை அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்த பெண் போலீஸ் லலிதா சால்வே, ஆணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும், சிகிச்சைக்குப்பின் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் ஆண் போலீசாக பணியாற்றவும் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அதே நேரத்தில், இந்த விஷயத்தில் முதல்-மந்திரி சாதகமான முடிவை எடுப்பார் என லலிதா சால்வேயின் உறவினர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த போலீஸ் அதிகாரிகள், இது தொடர்பாக விரிவாக பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் கொள்கை ரீதியிலான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர். முதல்-மந்திரி இதில் நேர்மறையான முடிவு எடுப்பார் எனவும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story