காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த தமிழ்நாட்டின் மிரட்டலுக்கு மத்திய அரசு பயப்படக்கூடாது - தேவேகவுடா
தமிழ்நாட்டின் மிரட்டலுக்கு மத்திய அரசு பயப்படக்கூடாது என தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த தமிழ்நாட்டின் மிரட்டலுக்கு மத்திய அரசு பயப்படக்கூடாது என்று தேவேகவுடா கூறினார்.
முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஆனால் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது சாத்தியம் இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு அவமதித்துவிட்டதாக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
2 மாநிலங்களும் நல்லிணக்கத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் இதில் தமிழ்நாடு இன்னும் தனது நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் என்ன செய்தது, சுப்ரீம் கோர்ட்டு என்ன நிலையை எடுத்தது என்பது குறித்து மத்திய அரசு ஆழமாக ஆராய வேண்டும்.
இந்திய வரலாற்றில் நடுவர் மன்றம் எப்போதும் இடைக்கால தீர்ப்பை வழங்கியது இல்லை. தீர்ப்பு வந்தவுடன் அதை அமல்படுத்த கோரி மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். உடனே பிரதமராக இருந்த நரசிம்மராவ் நேரடியாக வந்து ஜெயலலிதாவிடம் வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார். அவருடைய கோரிக்கையையும் நிறைவேற்றினார்.
நமது கன்னடர்களுக்கு அன்று முதலே அநீதி ஏற்பட்டு வருகிறது. கன்னடர்களை தூண்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நான் கூறவில்லை. நமக்கு ஏற்பட்டுள்ள அநீதியை இங்கே குறிப்பிடுகிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கேட்கிறது. அங்குள்ள சிலர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறார்கள். சாமானியன் ஒருவர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.
2 மாநிலங்களுக்கும் பாசனத்திற்கு தேவையான தண்ணீர் மற்றும் கர்நாடகத்திற்கு குடிநீர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த ஒரு எம்.பி., தற்கொலை செய்து கொள்வதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் கூறுகிறார். தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். போராட்டங்கள் மூலம் தமிழ்நாடு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது.
தமிழ்நாட்டின் மிரட்டலுக்கு மத்திய அரசு பயப்படக்கூடாது. கர்நாடகத்தின் நலனை காக்க வேண்டும். மத்திய அரசு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை நான் நேரில் சந்தித்து காவிரி பிரச்சினை குறித்து பேசினேன். தமிழக எம்.பி.க்கள் எங்கள் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரச்சினையில் கர்நாடகத்திற்கு ஆதரவாக நான் முடிவு எடுத்தால், ஆட்சி கவிழ்ந்துவிடும், எங்கள் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று மன்மோகன்சிங் என்னிடம் கூறினார்.
அப்போது கர்நாடகத்தில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே, எஸ்.எம்.கிருஷ்ணா உள்பட 4 பேர் மத்திய மந்திரிகளாக இருந்தனர். அவர்களாலும் கர்நாடகத்திற்கு ஆதரவாக எதுவும் செய்ய முடியவில்லை. காவிரி பிரச்சினையில் பா.ஜனதா உள்பட நாம் அனைவரும் சேர்ந்து போராடலாம் என்று மத்திய மந்திரி அனந்தகுமாரிடம் கூறினேன். அவர் இதை கண்டுகொள்ளவில்லை. இது தான் கர்நாடகத்தின் நிலை. இங்கு ஒற்றுமை இல்லை.
கர்நாடகத்திற்கு கூடுதலாக 14 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் கிடைத்துள்ளது. ஆனால் மாநிலத்திற்கு தொடர்ச்சியாக நடைபெறும் அநீதி இன்னும் நிற்கவில்லை. காவிரி வழக்கில் கர்நாடகம் சார்பில் ஆஜராகும் மூத்த வக்கீல் நாரிமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக ஒரு திறமையான வக்கீலை மாநில அரசு நியமிக்க வேண்டும்.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுப்ரீம் கோர்ட்டு பெங்களூருவுக்கு குடிநீர் ஒதுக்கீட்டை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனால் தற்போது பெங்களூருவில் 1.20 கோடி மக்கள் இருக்கிறார்கள். காவிரி நதி படுகையில் 3 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசியம்.” என தேவேகவுடா கூறினார்.

Related Tags :
Next Story