சென்னை புறநகர் பகுதியில் கடை அடைப்பு- மறியல் போராட்டம்
சென்னை புறநகர் பகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர், வக்கீல்கள் கடை அடைப்பு மற்றும் சாலை மறியல், ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள், வணிகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று கடைஅடைப்பு, சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆலந்தூர் மார்க்கெட், எம்.கே.என்.சாலை உள்பட பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆலந்தூர் நீதிமன்ற வக்கீல்கள், நீதிமன்றத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையில் ஊர்வலமாக சென்று பரங்கிமலையில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் அலுவலகத்துக்குள் நுழைந்துவிடாதபடி போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தினார்கள்.
பின்னர் அலுவலகத்தின் எதிரே சாலையில் வக்கீல்கள் மனித சங்கிலி போல் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளகரம், புழுதிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், வேளச்சேரி, கிண்டி, தரமணி, பெரும்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட பல பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
தாம்பரம் சண்முகம் சாலை, மார்க்கெட், பஸ் நிலையம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், சிட்லபாக்கம், செம்பாக்கம், சேலையூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தாம்பரம் மற்றும் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து தாம்பரம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் கூட்டணி கட்சியினர் 500 பேர் தாம்பரம் பஸ் நிலையத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் இரு புறத்திலும் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி தலைமையில் 700-க்கும் மேற்பட்ட தி.மு.க. கூட்டணி கட்சியினர் குரோம்பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஜி.எஸ்.டி. சாலை சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு கடையை திறந்து ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு வந்த தி.மு.க.வின் ஒரு தரப்பினர் கடை திறந்து இருப்பதாக நினைத்து சேர்களை தூக்கி எறிந்தனர். மேலும் அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவையும் கவிழ்த்தனர். அதே சாலையில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்த தள்ளுவண்டி டிபன் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதையடுத்து தி.மு.க. நிர்வாகிகள் வந்து அந்த கடைக்காரர்களை சமாதானம் செய்தனர்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இந்திய தேசிய லீக் கட்சியினர் மாவட்ட தலைவர் அக்பர் அலி தலைமையில் சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
தமிழ்நாடு டிப்பர் லாரி மணல் அள்ளும் எந்திர உரிமையாளர் நலசங்கம் சார்பில் தாம்பரம் துரைசாமி தெருவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி ரெயில் நிலையத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சா.மு.நாசர் தலைமையில் அதன் கூட்டணி கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் திருமுல்லைவாயல் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அம்பத்தூர் நீதிமன்ற வக்கீல்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து நீதிமன்றம் எதிரில் அம்பத்தூர் எம்.டி.எச். சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மணலியில் இருந்து உயர்நீதிமன்றம் செல்லும் மாநகர பஸ்(தடம் எண் 56டி) தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் வந்தபோது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதேபோல் புதுவண்ணாரபேட்டை நாகூரான் தோட்டம் அருகே திருவொற்றியூரில் இருந்து பூந்தமல்லிநோக்கி சென்ற(தடம் எண் 101) பஸ் கண்ணாடியும் கல்வீசி தாக்கப்பட்டது.
பெரம்பூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, வண்ணாரபேட்டை, கொருக்குபேட்டை, ஆர்.கே.நகர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
செங்குன்றம் பஜார் அடுத்த செங்குன்றம் நகர தி.மு.க. அலுவலகம் எதிரே சென்னை கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த மாநகர பஸ் (தடம் எண் 242) மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர்.
திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.சங்கர் தலைமையில் பஸ்நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரும், திருவொற்றியூர் தேரடியில் அவைத்தலைவர் முத்தையா, பொதுக்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரும், மணலியில் வட்ட செயலாளர் ஸ்டாலின், கோபி, கரிகால் சோழன் ஆகியோர் தலைமையில் மணலி பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
எண்ணூர் தாழங்குப்பம் பஜாரில் சாலைமறியலில் ஈடுபட்ட வட்ட செயலாளர் சிவகுமார் உள்பட 50 பேரும், எண்ணூர் பஸ்நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட முன்னாள் நகராட்சி தலைவர் திருசங்கு உள்பட 50 பேரும் கைதானார்கள்.
திருவொற்றியூர் வக்கீல்கள் சங்க தலைவர் ஏழுமலை, செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் வக்கீல்கள் இந்தியன் வங்கி முன்பு மோடி உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சென்னை ராயபுரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு பூட்டு போட முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்தனர். அப்போது அவர்கள், அங்கிருந்த இந்தி எழுத்தை சாயம் பூசி அழித்தனர். மேலும் அவர்கள் பிரதமர் மோடி உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சோழவரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வே.கருணாகரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பாடியநல்லூர் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம் நகர செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புழல் ஏரிக்கரை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட அங்குள்ள மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story