பயன்படாத ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் இடிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


பயன்படாத ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் இடிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 6 April 2018 3:45 AM IST (Updated: 6 April 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

மங்கலத்தை அடுத்த சாமளாபுரத்தில் பயன்படாத ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் இடிக்கப்படுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மங்கலம்,

திருப்பூர் மங்கலத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். சாமளாபுரம் குளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. 30 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கடந்த 10 ஆண்டுகளாக கட்டிடம் பாழடைந்து செயல்படாமல் உள்ளது.

இங்கு செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப துணைசுகாதார நிலையம் தற்போது தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று வந்தனர். அரசு ஆரம்ப துணை சுகாதார நிலைய கட்டிடம் உட்பகுதியில் முட்புதர்கள் வளர்ந்து விஷ ஜந்துகள் அதிக அளவில் உள்ளது.

மேலும் இந்த பழமையான கட்டிடம் குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தின் வழியாக பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கடந்து செல்கிறார்கள். இதனால் இந்த பழமையான கட்டிடமானது பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் கட்டிடமாக உள்ளது. மேலும் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு அதே இடத்தில் புதிய அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டித்தரவேண்டும் என்று சாமளாபுரம் பகுதி பொதுமக்களும், அப்பகுதி சமூக ஆர்வலர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story