ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது


ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது
x
தினத்தந்தி 6 April 2018 4:15 AM IST (Updated: 6 April 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொன்னேரி,

காவிரி மோண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பொன்னேரியில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் தலைமை தாங்கினார். மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளங்கோவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றிராஜேஷ், மாவட்ட துணை செயலாளர் கோளூர்கதிரவன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் தீபன் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு மின்சார ரெயில் முன் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருநின்றவூரில் தி.மு.க. நகர செயலாளர் தி.வை. ரவி தலைமையில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களை திருநின்றவூர் போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருத்தணி ரெயில் நிலையத்தில் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் கும்மிடிபூண்டி வேணு. மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சந்திரன், நகர செயலாளர் பூபதி. ஒன்றிய செயலாளர் ஆரத்தி ரவி, மாவட்ட பொருளாளர் சத்யராஜ், ம.தி.மு.க. துணை செயலாளர் கவுரிகுமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் என ஏராளமானோர் மின்சார ரெயிலை வழி மறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட அவைத்தலைவர் திராவிடபக்தன், மாநில விவசாய அணி அமைப்பாளர் ஆதிசேஷன், திருவள்ளூர் நகரசெயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் காக்களூர் ஜெயசீலன், ரமேஷ், கிறிஸ்டி என்கிற அன்பரசு, மகாலிங்கம், கூளூர் ராஜேந்திரன், தொண்டரணி அமைப்பாளர் கமலக்கண்ணன், இளைஞரணி செயலாளர் மோதிலால், மாணவர் அணி அமைப்பாளர் டி.கே.பாபு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில நிர்வாகிகள் தி.ராசகுமார், நீலவானத்து நிலவன், தளபதி சுந்தர், சித்தார்த்தன், எஸ்.கே.குமார், காங்கிரஸ் கட்சி சார்பில் சி.பி.மோகன்தாஸ், மதன், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆர்.மகேஷ்பாபு, ஜெகதீசன், நகர செயலாளர் வேலு என ஏராளமானோர் அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில்களை மறித்து அதன் மீது ஏறி நின்றும், தண்டவாளத்தில் அமர்ந்தும் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story