காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் கடையடைப்பு- சாலை மறியல் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் கடையடைப்பு- சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், சாலை மறியல், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தி.மு.க. நகர செயலாளர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். தொடர்ந்து தொண்டர்கள் பஸ்நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்று ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தி.மு.க.வை சேர்ந்த தமிழ்மணி, குமார், மனோகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெருமாள், கண்ணன், சிராஜ்தீன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மீனா ஹரிராமலிங்கம், தங்கமணி, கணேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த குடியரசு, தொல்குடி மைந்தன், முஸ்லிம் லீக் அக்பர் அலி, ஹக்கீம், மனித நேய மக்கள் கட்சி ஹக்கீம் உள்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமசந்திரன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம் (கிழக்கு), சுரேந்திரன் (மேற்கு), மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வக்கீல் அஸ்ரப் அலி ஆகியோர் முன்னிலையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் டி.டி.அரங்கசாமி, ம.தி.மு.க. செல்வகுமார், சு.வேலுசாமி உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் நகர மற்றும் ஒன்றிய தி.மு.க. சார்பில், நெ.2 கூடலூர் பேருராட்சி முன்னாள் தலைவர் அ.அறிவரசு தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. நகர நிர்வாகி ந.கனகராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அமைப்பு நிர்வாகிகள் முத்து லட்சுமி உள்பட 100 பேர் ரெயில்மறியல் செய்ய காத்திருந்தார்கள். ஆனால் ரெயில் பெரியநாயக்கன்பாளையம் ரெயில் நிலையத்திற்கு வர தாமதமானது. பின்னர் அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை 10 மணியளவில் சி.ஐ.டி.யு.இ., ஏ.ஐ.சி.சி.டி.யு.இ., எம்.எல்.எப். மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு. சார்பில் சி.பத்்மநாபன், ஏ.ஐ.சி.சி.டி.யு.இ. சார்பில் எம்.கே.நடராஜ், எம்.எல்.எப். சார்பில் சீனிவாசன், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் திடீரென அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதி்ல் 10 பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரமடை கார் நிறுத்த மைதானத்தில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மேட்டுப்பாளையம்- கோவை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஷன், கிளை செயலாளர் ராயப்பன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேந்திரன், அருள் ரங்கராஜ், நாகராஜ், ம.தி.மு.க. ஒன்றிய அவை தலைவர் டி.எம்.அரங்கசாமி மற்றும் 100 பெண்கள் உள்பட 500 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்தனர். பின்னர் கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story