குளிர்பான கடைகளை நடத்துபவர்கள் சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு


குளிர்பான கடைகளை நடத்துபவர்கள் சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 6 April 2018 4:15 AM IST (Updated: 6 April 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

குளிர்பான கடைகள் மற்றும் பழக்கடை நடத்துபவர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்,


தற்போது கோடைகாலம் தொடங்க உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் குளிர்பானங்கள், பழவகைகள் அதிகம் பயன்படுத்துவார்கள். எனவே பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் சாலையோர பழச்சாறு கடைகள் மற்றும் குளிர்பான கடைகள் நடத்துபவர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்.

மேலும் பொதுமக்கள், பயன்பாட்டிற்காக வாங்கும் குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை காலாவதி தேதி பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். பேக்கரி, டீக்கடைகள், குளிர்பான நிலையங்கள், பழ ஜுஸ் கடைகளை நடத்தி வருபவர்கள் பொதுமக்களுக்கு தரமான, காலாவதி ஆகாத, பயன்படுத்த உகந்த மூலப் பொருட்களை கொண்டு உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு பாதுகாப்பு உரிமம்


பொதுமக்களுக்கு தரமான மற்றும் பயன்பாட்டிற்கு உகந்த குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதற்கு ஏதுவாக நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர், மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரி, டீக்கடைகள், குளிர்பான நிலையங்கள், பழஜுஸ் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். பேக்கரி, டீக்கடைகள், குளிர்பான நிலையங்கள், பழஜுஸ் கடைகளை நடத்துபவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு கட்டாயம் பெற்று கடையில் வைத்து இருக்க வேண்டும்.

உணவுப் பாதுகாப்புதுறை அலுவலர்கள் ஆய்வின்போது உரிமம் மற்றும் பதிவு தொடர்பான ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். தவறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் சந்தேகப்படும்படியான குளிர்பானங்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ்–அப் எண்ணான 94440–42322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவித்தால், தவறு செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story