காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரெயிலை சிறை பிடித்து மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சேலத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ரெயிலை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.
போராட்டத்தை தடுக்கும் வகையில், ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு தடுப்பு கம்பிகள் மற்றும் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அங்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ஆர்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையிலான தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தடுப்பை தாண்டி முன்னேறி செல்ல முயன்றனர். இதனால், அங்கு பணியில் இருந்த போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கட்சியினர் கோஷம் எழுப்பினார்கள். அந்த வேளையில் சிறிது நேரத்தில் பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் 1-வது பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் என்ற அறிவிப்பு வந்தது.
காலை 10.45 மணிக்கு, ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் ஆவேசம் கொண்ட கட்சியினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தகர்த்து எறிந்து விட்டு திபுதிபுவென ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு மற்றும் தடுப்பில் மோதி 3 பெண்கள் காயம் அடைந்தனர்.
மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசாரும் நெரிசலில் சிக்கி செய்வதறியாது தவித்தனர். ரெயில் நிலையத்திற்குள் பிளாட்பாரத்திற்குள் நுழைந்த கட்சியினர் கோஷமிட்டவாறு ஓட்டமும், நடையுமாக சென்றனர். இதனால், ரெயில் நிலையத்தில் பரபரப்பும், பதற்றமும் நிலவியது.
அந்த வேளையில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்திற்குள் நுழையும் முன்பே தண்டவாளத்தில் கோஷமிட்டபடி கட்சியினர் ஓடினர். அப்போது சிலர், ரெயில் என்ஜின் மீது கற்களை வீசினர். அதைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் அவர்கள் ரெயிலை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். சிலர் என்ஜின் மீது ஏறியும், தண்டவாளத்தில் அமர்ந்தும், ரெயில் பெட்டிகளின் படிக்கட்டுகளில் ஏறியும், ஜன்னல் கம்பிகளை பிடித்து ஏறி நின்றும் கோஷம் போட்டனர். ‘மத்திய அரசே அமைத்திடு..அமைத்திடு..காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு!, துணை போகாதே..துணை போகாதே.. மாநில அரசே துணை போகாதே! என்பன போன்ற கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கூறுகையில்,“தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் நழுவும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. மேலும் கர்நாடகாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த செயலுக்கு தமிழக அ.தி.மு.க. அரசு போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. காவிரி டெல்டா பாசன பகுதிகள் எல்லாம் பாலைவனமாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும்“ என்றார்.
சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக ரெயிலை சிறைபிடித்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வகணபதி, சேலம் மத்திய மாவட்ட அவைத்தலைவர் எஸ்.டி.கலையமுதன், பொருளாளர் சுபாசு, தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், நிர்வாகிகள் எஸ்.ஆர்.அண்ணாமலை, நாசர்கான், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ், துணைத்தலைவர் பச்சப்பட்டி பழனிசாமி மற்றும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன் உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர்.

Related Tags :
Next Story