காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 10,000 கடைகள் அடைப்பு- வர்த்தகம் பாதிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த பொது வேலைநிறுத்தத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க., கூட்டணி கட்சியினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியினர் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தனர். திருவண்ணாமலையிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் திருவண்ணாமலை நகரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் இயங்க வில்லை. மேலும் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஓடின. ஆனால் பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்கவில்லை.
இந்த முழு அடைப்பு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமையில், கூட்டணி கட்சியினர் பஸ் நிலைம் அருகே உள்ள ரவுண்டானாவில் இருந்து திருவண்ணாமலை ரெயில் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.
காலை 8.40 மணி அளவில் திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் பயணிகள் ரெயிலை முற்றுகையிட ரெயில் நிலையத்திற்குள் சென்றனர். ரெயில் தாமதமாக 9.40 மணி அளவில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது தி.மு.க., கூட்டணி கட்சியினர் ரெயிலை மறித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ரெயில்வே போலீசார் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அவர்களை கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 80 பெண்கள் உள்பட 630 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டத்தில் பிச்சாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், டாக்டர் எ.வே.கம்பன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தமிழ் மாநில காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. மேலும் அரசு பஸ்கள் இயங்கின. ஆட்டோக்கள் ஓடவில்லை.
போளூரில் கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பஸ், ஆட்டோ ஓட வில்லை. அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. போளூர் பஸ் நிலையம் முன்பாக கே.வி.சேகரன் எம்.எல்.ஏ. (தி.மு.க.) தலைமையிலும், தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.ராஜேந்திரன் முன்னிலையிலும் தி.மு.க., கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
வேட்டவலத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தி.மு.க., கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், காய்கனி மார்க்கெட், பஜார் தெரு உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. தி.மு.க., கூட்டணி கட்சியினர் மு.பெ.கிரி எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். புதுப்பாளையத்தில் மாவட்ட துணை செயலர் சுந்தரபாண்டியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க., கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சந்தவாசலில் திருவண்ணாமலை மெயின் ரோடு பகுதியில் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் தலைமையில், சாலை மறியல் நடந்தது. சந்தவாசல் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
கண்ணமங்கலம், சந்தவாசல், படவேடு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
சேத்துப்பட்டில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் சேத்துப்பட்டு 4 வழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் தி.மு.க. நகர செயலாளர் முருகன், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் சத்தியன், த.மு.மு.க. நகர தலைவர் அக்பர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் அசுரவடிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் சேத்துப்பட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
செய்யாறு டவுனில் நேற்று காலையில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் அண்ணா சிலை முன்பு குவிந்தனர். அப்போது அந்த வழியாக செய்யாறில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சை தி.மு.க. மாநில விவசாயிகள் அணி துணை அமைப்பாளர் வ.அன்பழகன் தலைமையில், கூட்டணி கட்சியினர் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் வழிமறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து டிரைவர் பஸ்சை செய்யாறு பஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் செய்யாறு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தி.மு.க., கூட்டணி கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் பஸ் நிலையத்தின் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து பகல் 12 மணிக்கு பிறகு வழக்கம்போல பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும் செய்யாறில் காந்தி சாலை, ஆற்காடு சாலை, காய்கறி மார்க்கெட் பகுதி மற்றும் பஸ் நிலையத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
ஆரணி நகரில் மார்க்கெட் ரோடு, காந்தி ரோடு, பெரியகடை வீதி, மண்டி வீதி, புதிய, பழைய பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின.
தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம் தலைமையில், தி.மு.க., கூட்டணி கட்சியினர் திறந்திருந்த சில கடைகளை மூட வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். பழைய பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களை இயக்கவிடாமல் தடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, தாசில்தார் சுப்பிரமணி ஆகியோர் சென்று, திறந்த கடைகளை மூடச்சொல்லி அறிவுறுத்தக்கூடாது. பஸ்களை இயக்கக்கூடாது என்று சொல்லக்கூடாது என்றனர்.
இதனையடுத்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலை அருகே தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பஸ் நிறுத்தம் அருகே தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் எம்.சுகுமாரன் தலைமையில், 30-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்து ஆரணியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Tags :
Next Story