ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை கலெக்டர் ஆய்வு
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தினசரி பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சுகாதார திட்டப்பணிகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி நேற்று ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கலெக்டர் எஸ்.பிரபாகர் திடீர் ஆய்வு நடத்தினார்.
ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்ற அவர், அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் நோயாளிகளின் வருகை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரியின் ஆய்வகத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு உள்ள பரிசோதனை கருவிகள், அவற்றை பயன்படுத்தும் விதம் குறித்து பணியாளர்களிடம் விசாரித்தார். குழந்தைகள் சிகிச்சை பிரிவு, எலும்பு மருத்துவ சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார். நோயாளிகளையும் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தரமாக உள்ளதா? என்று கேட்டு அறிந்தார். ஆஸ்பத்திரியின் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பகுதிக்கு சென்ற அவர், நோயாளிகள் சாப்பிட வைத்திருந்த உணவை ருசித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் டாக்டர்களை அழைத்து அரசு ஆஸ்பத்திரிகளை தேடி வரும் ஏழை மக்களிடம் அன்புடன் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆஸ்பத்திரி விரிவாக்க கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகாச்சலகுமார் உள்பட மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர். அங்கிருந்து புறப்பட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு சென்று அங்கு பதிவேடுகள் பராமரிக்கும் அறையை பார்வையிட்டார். அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்த விவரத்தையும் கேட்டு அறிந்தார்.
நிகழ்ச்சியின்போது ஈரோடு தாசில்தார் அமுதா உடன் இருந்தார். இதுபோல் பஸ்நிலையம் மற்றும் வ.உ.சி.பூங்கா பகுதிகளிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். நேற்று கலெக்டர் எஸ்.பிரபாகர் ஆய்வுக்கு சென்றபோது வழக்கத்தை விட மாறாக வேட்டி-சட்டை அணிந்திருந்தார். இது பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாக இருந்தது.

Related Tags :
Next Story