பட்ஜெட்டில் மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 83 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டது


பட்ஜெட்டில் மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 83 சதவீத நிதி பயன்படுத்தப்பட்டது
x
தினத்தந்தி 6 April 2018 5:00 AM IST (Updated: 6 April 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சியில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தொகை சில சிறிய மாநிலங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தொகையை விட அதிகமாக இருக்கும்.

மும்பை,

பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை வளர்ச்சித் திட்டங்களுக்கு முழுமையாக செலவிடப்படுவதில்லை.

இந்தநிலையில், கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில் மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் நிதியில் 83 சதவீதம் செலவிடப்பட்டு உள்ளதாக மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ‘‘2017-18-ம் நிதி ஆண்டில் மும்பையில் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.6 ஆயிரத்து 111 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில், 5 ஆயிரத்து 52 கோடி அந்த பணிகளுக்காக செலவிடப்பட்டு உள்ளது.

சாலைகள், குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை பணிகள், வளர்ச்சி பணிகளுக்கான திட்டமிடல், பொது சுகாதாரம் மருத்துவமனைகள், சந்தைகள் உள்ளிட்டவைகளுக்காக அதிகளவில் செலவிடப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மேம்பாட்டு பணிகளுக்காக அதிகபட்சமாக செலவிடப்பட்ட தொகை இது தான்.

2016-17-ம் நிதி ஆண்டில் பட்ஜெட்டில் மேம்பாட்டு பணிகளுக்கு 5 ஆயிரத்து 399 கோடியே 67 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது 3 ஆயிரத்து 850 கோடியே 46 லட்சம் தான் செலவிடப்பட்டது’’ என்றார். 

Next Story