குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை குழு அமைக்காவிட்டால் வழக்கு அரசுக்கு சி.ஐ.டி.யூ. எச்சரிக்கை
மராட்டிய அரசு குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை குழுவை அமைக்காவிட்டால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக சி.ஐ.டி.யூ. எச்சரித்துள்ளது.
மும்பை,
குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948-ன் படி, தியேட்டர்கள், ரசாயன நிறுவனங்கள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், புகையிலை நிறுவனங்கள் உள்பட 32 வகையான தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக ‘குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை குழு’ எனும் அமைப்பை ஏற்படுத்த வேண்டியது மராட்டிய அரசின் கடமையாகும்.
இந்த குழுவில் தனியார் நிறுவன முதலாளிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் இது சம்பந்தப்பட்ட மந்திரிகள் பங்குபெறுவர். இந்த குழுவினர் 5 வருடங்களுக்கு ஒருமுறை தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வர்.
இந்தநிலையில் மராட்டியத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படவில்லை. மேலும் குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை குழுவும் அமைக்கப்படவில்லை.
இது தொடர்பாக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர், குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை குழு அமைக்கப்படாவிட்டால் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக எச்சரிக்கை விடுத்து தொழிலாளர் நலத்துறை மந்திரி சாம்பாஜி நிலங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.
இது குறித்து சி.ஐ.டி.யூ.வின் தேசிய துணைத்தலைவர் டி.எல்.காரத் கூறியதாவது:-
சட்டப்படி குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை குழு அரசால் அமைக்கப்பட்டு அந்த குழுவினரின் வழிகாட்டுதலின் கீழ் தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அரசு இதற்காக பிரத்யேகமாக ஏதும் நிதி ஒதுக்க தேவையில்லை. தனியார் நிறுவனங்களே அவர்களது தொழிலாளிகளுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.
ஆனால் அரசு முதலாளிகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக குறைந்தபட்ச ஊதிய பரிந்துரை குழுவை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் தனியார் நிறுவன தொழிலாளிகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.ஐ.டி.யு. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story