தனியார் பள்ளியை கண்டித்து சாலை மறியல்
மாணவியை பொட்டு வைத்து வரக்கூடாது என்று எச்சரித்த தனியார் பள்ளியை கண்டித்து சாலை மறியல் நடந்தது.
சேத்துப்பட்டு,
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில் சேத்துப்பட்டு செல்லும் சாலையில் தனியார் மெட்ரிக்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி அஸ்வினி நேற்று முன்தினம் சந்தனம் மற்றும் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றதாகவும், அந்த மாணவியை, பள்ளி தலைமை ஆசிரியை தனது அறைக்கு அழைத்து சென்று, பள்ளிக்கு வரும்போது பொட்டு வைத்து வரக்கூடாது என்று எச்சரித்து பொட்டை அழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறினாள். இதனால் மாணவியின் தந்தை அன்பழகன் அந்த பள்ளிக்கு சென்று இதுகுறித்து கேட்டதற்கு பள்ளி நிர்வாகம் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மாணவியின் பெற்றோர், இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னராஜ், தாசில்தார் அரிதாஸ், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் கார்த்திகா சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர், பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியையிடம் இனி வரும் நாட்களில் பொட்டு வைக்கக்கூடாது என்று நான் கூற மாட்டேன் என கடிதம் மூலம் எழுதி வாங்கினார்.
அப்போது வருவாய் ஆய்வாளர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story