தஞ்சையில், வருமான வரி அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 75 பேர் கைது


தஞ்சையில், வருமான வரி அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 75 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2018 3:30 AM IST (Updated: 7 April 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில், வருமான வரி அலுவலகத்துக்கு பூட்டு போட முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர், 

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் மத்திய அரசு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அமைக்கவில்லை. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த போராட்டம் விசுவரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்துக்கு பூட்டுபோடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி தஞ்சை மாவட்ட செயலாளர் தியாககாமராஜ் தலைமையில் மாவட்ட தலைவர் குருமூர்த்தி, இணை செயலாளர் விவேகானந்தன், இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திரண்டு வந்தனர். இதையொட்டி அங்கு தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரத்தினவேலு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அன்பழகன், முருகேசன், ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

போராட்டக்காரர்கள் உள்ளே செல்லாமல் இருப்பதற்காக வருமானவரி அலுவலகத்தின் முன்பு இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை போலீசார் அமைத்து இருந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அலுவலகம் முன்பு பூட்டுடன் நின்று கோஷங்கள் எழுப்பினர். உடனே போலீசார், அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்து 75 பேரை கைது செய்தனர்.

Next Story