கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தாவிட்டால் நீதிமன்றம் செல்வோம் - இன்பத்தமிழன்


கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தாவிட்டால் நீதிமன்றம் செல்வோம் - இன்பத்தமிழன்
x
தினத்தந்தி 7 April 2018 3:15 AM IST (Updated: 7 April 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தாவிட்டால் நீதிமன்றம் சென்று தடை பெறுவோம் என அ.ம.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பத்தமிழன் தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் வந்த அ.ம.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பத்தமிழன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கூட்டுறவு சங்கங்களில் 11 இயக்குனர் பதவிகளுக்கு ஆளுங்கட்சியினரிடம் மட்டுமே மனுக்கள் பெறப்படுகிறது. எங்கள் மனுக்களை பெற மறுக்கின்றனர். சட்டப்படி தகுதியுள்ள அனைவரிடமும் மனுக்களை பெற வேண்டும்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். இதனை கண்டித்து கூட்டுறவு ஊழியர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். எனவே கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தாவிட்டால் நாங்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இன்பத்தமிழனுடன் அ.ம.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

Next Story