தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கூட்டுறவு சங்க பணியாளர்கள் வலியுறுத்தல்


தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கூட்டுறவு சங்க பணியாளர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 April 2018 3:15 AM IST (Updated: 7 April 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகமும் கூட்டுறவு தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்கக் கோரி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,

விருதுநகரில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் ராகவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் தங்கப்பாண்டியன் நன்றி கூறினார்.

கோரிக்கைகள் குறித்து சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தெரிவித்ததாவது:-

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு அதனடிப்படையில் முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது. தேர்தல் ஆணையாளர் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் போது தேர்தலை முறையாக நடத்திடவும், தேர்தல் பணியில் கலந்து கொள்ளும் அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஆனால் தற்போது நடைபெற்று வருகின்ற கூட்டுறவு தேர்தலில் தேர்தல் அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி கடுமையாக தாக்கப்படுவதும் அலுவலகத்தில் வைத்து பூட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் மற்றும் அலுவலக தளவாடங்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.

எனவே இந்த நிலையை மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், இடர்பாடுகளை நிவர்த்தி செய்யாததை கண்டித்தும் 

Next Story