ஆக்கிரமிப்பு அகற்றத்தால் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி: கதறி அழுதபடி உறவினர்கள் தர்ணா போராட்டம்
வீரபாண்டியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்றார். அவருடைய உறவினர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கதறி அழுதபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி,
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோவில் அருகில் கடந்த டிசம்பர் மாதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட பகுதியில் சிலர் மீண்டும் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தனர். கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அங்கு ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த குடிசைகள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
அதே பகுதியில் ராஜூ என்பவருடைய மகன் அனீஸ்குமார் (வயது 19) வசித்து வருகிறார். இவர் வீரபாண்டியில் உள்ள கலை கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2-வது ஆண்டு படித்து வருகிறார். நேற்று மாலையில் அனீஸ்குமார் அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அவருடைய உறவினர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதற்கிடையே அனீஸ்குமார் சிகிச்சைக்காக வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டரின் அறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கதறி அழுதபடி இருந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் தர்ணா செய்தவர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அவர்களில் சிலர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரனை சந்தித்து முறையிட்டனர். கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து உறவினர்கள் கதறி அழுதபடியே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

Related Tags :
Next Story