கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கர தீ: வனத்துறையினர் போராடி அணைத்தனர்
கொடைக்கானல் மலைப்பகுதியில் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது. அதை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் சவரிக்காடு அமைந்துள்ளது. இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் புதுப்பாலம் என்ற இடத்தில் சாலையோரத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றியது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மள மளவென அருகில் உள்ள பட்டா நிலங்களிலும் பரவியது. சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது கொடைக்கானல் மலைப்பகுதிக்கு உட்பட்ட பட்டா நிலங்களில் தீப்பற்றி எரிவது தெரியவந்தது. ஆனாலும் பழனி வனப்பகுதிக்குள் தீ பரவி விடக்கூடாது என்பதற்காக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் இரவு நேரம் என்பதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் தீயை அணைக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் நேற்று அதிகாலை 6 மணி முதல் மீண்டும் தீயணைப்பு பணி தொடங்கியது. பச்சை செடி கொடிகளை வெட்டி தீப்பிடித்த இடங்களில் போட்டும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி வனச்சரகர் கணேஷ்ராம் கூறும்போது, பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் புதுப்பாலம் பகுதியில் சாலையோரத்தில் மர்ம நபர்கள் யாரேனும் சிகரெட், பீடி துண்டுகளை அணைக்காமல் போட்டிருக்கலாம். அதன் மூலம் பற்றிய தீ பட்டா நிலங்களில் பரவி காட்டுத்தீ போல் எரிந்துள்ளது. அது பழனி வனப்பகுதிக்குள் பரவி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்களுடன் சேர்ந்து போராடி தீயை அணைத்தோம், என்றார்.

Related Tags :
Next Story