கோர்ட்டு உத்தரவை மீறி குடிநீர் எடுப்பதாக தாலுகா அலுவலகத்தில் 6 கிராம மக்கள் முற்றுகை
கோர்ட்டு உத்தரவை மீறி ராமேசுவரத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிநீர் எடுப்பதாக 6 கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்,
தங்கச்சிமடத்தை அடுத்துள்ள செம்மமடம், மெய்யம்புளி, நொச்சிவாடி, தென்குடா உள்பட 6 கிராம மக்கள் தங்கள் பகுதியில் இருந்து கோர்ட்டு உத்தரவை மீறி ராமேசுவரத்துக்கு கூடுதலாக குடிநீர் எடுக்கப்படுவதை கண்டித்து நேற்று காலை ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சிவா, கருணாகரன் தங்கச்சிமடம் பசீர், வல்லவ கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் செம்ம மடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கூடுதலாக குடிநீர் எடுத்து ராமேசுவரத்தில் வினியோகிப்பதாகவும், மாலை 6 மணிக்கு மேல் குடிநீர் எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவு இருந்தும் அதனை மீறி இரவு நேரங் களில் டேங்கர் லாரிகளில் கூடுதலாக தண்ணீர் எடுத்துச்செல்வதாகவும், எனவே இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அங்கிருந்து தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாசில்தார் சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மாலை 6 மணிக்கு மேல் குடிநீர் எடுப்பது தடுக்கப்படும் என்றும், கோர்ட்டு உத்தரவுப்படி குடிநீர் எடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்

Related Tags :
Next Story