பழவேற்காடு ஏரியில் நின்று மீனவர்கள் போராட்டம்


பழவேற்காடு ஏரியில் நின்று மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 April 2018 3:45 AM IST (Updated: 7 April 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பழவேற்காடு ஏரியில் நின்று போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி,

இவர்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அங்கே மீன்பிடி தொழிலுக்கு தேவையான படகுகள், மீன்பிடி வலைகள், மீன்விற்பனை செய்யுமிடம், உலர் மீன் காயவைக்கும் பகுதி உட்பட பல்வேறு இடங்கள் உள்ளன. இந்தநிலையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் கொண்டு வந்து புதிய வரை படங்களை வெளியிட்டது.

இந்த வரைபடத்தில் மீனவர்களின் குடியிருப்பு உள்பட பல்வேறு தகவல்களை சேகரித்து அவற்றை முறையாக பின்பற்றி மீனவர் பாதிக்கப்படும் இடங்களை சுட்டிக் காட்டாமல் வரைபடத்தில் மாற்றியுள்ளது தெரியவந்தது. இதனை எதிர்க்கும் வகையில் மீனவர்கள் பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க பொதுச்செயலாளர் துரைமகேந்திரன் தலைமையில் பழவேற்காடு ஏரியில் நின்று போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் 2011-ம் ஆண்டு வெளியிட்ட ஒழுங்கு முறை மண்டல அறிவிப்பானையை செயல்படுத்த வேண்டும் எனவும் புதிய வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story