மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா
ஆவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
ஆவடி,
ஆவடியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சி.ஆர்.பி.எப்.) பயிற்சி மைதானத்தில் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வந்த 1,313 வீரர்களுக்கு கடந்த 44 வாரங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.
அதன்படி அவர்களுக்கு, உடற்பயிற்சி, அணிவகுப்பு, எல்லாவிதமான நவீன ஆயுதங்களை கையாளும் பயிற்சி, குண்டு எறியும் பயிற்சி, துப்பாக்கியுடன் கூடிய குண்டெறியும் பயிற்சி, நக்சலைட்டு மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் பயிற்சி உள்பட பல்வேறு கடினமான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. காடுகளில் பதுங்கும் தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் விதமாக 7 நாட்கள் உணவுகளுடன் காடுகளில் தங்கும் பயிற்சியும் வழங்கப்பட்டது.
இதையடுத்து இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நேற்று காலை மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டி.ஐ.ஜி. பிரவீன் சந்திரகாந்த் காக் கலந்துகொண்டு பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட 8 வீரர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் டி.ஐ.ஜி. மற்றும் ஏ.டி.ஜி.பி. வத்சவா ஆகியோர் பயிற்சி பெற்ற வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். இங்கு பயிற்சி முடித்த வீரர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தடுப்பு, உள்நாட்டு பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழாவில் வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்து மெய்சிலிர்க்க வைத்தனர். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், பயிற்சி பெற்ற வீரர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story