காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி பேட்டி


காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் - கவர்னர் கிரண்பெடி பேட்டி
x
தினத்தந்தி 7 April 2018 4:45 AM IST (Updated: 7 April 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை தலைமை செயலகத்தில் ஆவணங்களை பாதுகாத்தல், திட்ட மேலாண்மை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமினை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார்.

அப்போது அரசுத்துறை பயிற்சி முகாம்களின் பல்வேறு தலைப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:-

நிதியை வேகமாக செலவிடுவதால் மத்திய அரசிடம் இருந்து பல மாநிலங்கள் கூடுதலாக நிதி பெறுகின்றன. புதுச்சேரி மாநிலத்துக்கும் அதிக நிதி கிடைக்கும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு நிதி மற்றும் திட்ட மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசுக்கு எதிராக புதுவையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தாலும் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்து வருகிறது. காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story