சேந்தமங்கலம் அருகே வாலிபருக்கு மதுபாட்டில் குத்து - கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது


சேந்தமங்கலம் அருகே வாலிபருக்கு மதுபாட்டில் குத்து - கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 7 April 2018 4:30 AM IST (Updated: 7 April 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை மதுபாட்டிலில் குத்தியதால் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேந்தமங்கலம்,

சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி - கொல்லிமலை மெயின்ரோட்டில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று அங்குள்ள பாருக்கு மலைவேப்பன்குட்டையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 27) என்பவர் வந்தார். அப்போது அங்கு மது குடித்துக்கொண்டு இருந்த 20 வயது முதல் 23 வயது கொண்ட 3 கல்லூரி மாணவர்கள் மற்றும் 19 வயது கொண்ட ஒரு கூலித்தொழிலாளியும் தகாத வார்த்தைகளால் உள்ளே வருபவர்களை திட்டிக்கொண்டிருந்தனர்.

அப்போது செந்தில்குமார் பொதுவான இடத்தில் இவ்வாறு நீங்கள் பேசக்கூடாது என தெரிவித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து செந்தில்குமார் மலைவேப்பன்குட்டை பிரிவு ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பாரில் இருந்து திடீரென அங்குவந்த கல்லூரி மாணவர்கள் 3 பேரில் ஒருவர் மதுபாட்டிலை உடைத்து செந்தில்குமாரை குத்தினார். இதில் காயமடைந்த அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து செந்தில்குமாரின் பெற்றோர் பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் கல்லூரி மாணவர்கள் 3 பேர், அவர்களுக்கு ஆதரவாக வந்த கூலித்தொழிலாளி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

Next Story