யானைகளால் சேதம் அடையும் விவசாய உபகரணங்களுக்கு இழப்பீடு


யானைகளால் சேதம் அடையும் விவசாய உபகரணங்களுக்கு இழப்பீடு
x
தினத்தந்தி 7 April 2018 5:07 AM IST (Updated: 7 April 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநில காடுகளில் இருந்து வெளியேறும் யானைக்கூட்டம் கோலாப்பூர் மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

மும்பை,

விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களின் போது சேதம் அடையும் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது போல மோட்டார் பம்புகள், டிராக்டர்கள் மற்றும் தடுப்பு வேலிகள் சேதம் அடையும் போது அவற்றிற்கும் இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட அரசு மாநிலம் முழுவதும் யானைகளால் சேதமடையும் விவசாய உபகரணங்களுக்கும் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி சேதமடையும் விவசாய கருவிகள் மற்றும் உபகரணங்களுக்கு சந்தை விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.5 ஆயிரம் இதில் எது குறைவோ அது நஷ்டஈடாக வழங்கப்படும். அதேபோல் சேதமடைந்த தடுப்புசுவர் மற்றும் வேலிகளுக்கு சந்தை விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் இதில் எது குறைவோ அது இழப்பீடாக வழங்கப்படும். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இருப்பினும் அத்துமீறி வனப்பகுதிக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்பவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story