அதிபர் மனைவியும் அறியப்படாத தகவல்களும்!


அதிபர் மனைவியும் அறியப்படாத தகவல்களும்!
x
தினத்தந்தி 7 April 2018 1:09 PM IST (Updated: 7 April 2018 1:09 PM IST)
t-max-icont-min-icon

வடகொரியா அதிபரின் மனைவி குறித்து முதன்முதலாக சில விஷயங்கள் வெளியாகியிருக்கின்றன.

மர்மதேசமான வடகொரியா பற்றியும், அதன் அதிபர் பற்றியும்கூட அவ்வப்போது தகவல்கள் கசிகின்றன. ஆனால் அதிபரின் மனைவி குறித்த எந்தத் தகவலும் கசிவதில்லை. முதன்முதலாக அவரைப் பற்றிய சில விஷயங்கள் வெளியாகியிருக்கின்றன.

சமீபத்தில் சீனாவுக்கு ரகசியப் பயணம் மேற்கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடன் அவரது மனைவி ரீ ஸால் ஜூவும் சென்றார்.

ரீ தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் வெளியானதில்லை. அவரது உண்மையான பெயர், வயது, அவரது பெற்றோர் என எதுவும் இதுவரை யாருக்கும் தெரியாது.

ரீ என்ற அவரது பெயர்கூட, பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சூட்டப்பட்ட மாற்றுப் பெயர் என்று கூறப்படுகிறது.

வடகொரியாவில் பிரபல பாடகியாக இருந்த ரீ ஸால் ஜூ, கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இசைக்கச்சேரி ஒன்றில் கலந்து கொண்டபோது முதன்முறையாக கிம் பார்வையில் பட்டுள்ளார்.

அதன் அடுத்த சில வாரங்களில், கிம் ஜாங் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நபர் இவர்தான் என்ற தகவல் வடகொரிய மக்கள் மத்தியில் பரவியது.

2014-ம் ஆண்டுக்குப் பின்னர் ஊடகங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த ரீ, கடந்த 2005-ம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வடகொரியா சார்பில் பங்கேற்றவர்.

பாடகியான ரீ, வடகொரிய அதிபர் கிம்மும் அவரது தந்தையும் 2010-ம் ஆண்டு நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருக்கிறார்.

ரீயின் உண்மையான பெயர் ஹியோன் சோங் வோல் என்றும், கிம் உடனான திருமணத்துக்குப் பின்னர் அவர் தனது பெயரை மாற்றியிருக்கலாம் என்றும் தென்கொரிய உளவுப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

2009-ம் ஆண்டு கிம் ஜாங்கின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, கிம் ஜாங்- ரீ திருமணம் அவசரமாக நடைபெற்றது.

அதே ஆண்டு தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த ரீ, தொடர்ந்து 2013-ம் ஆண்டு இரண்டாவது குழந்தையையும், 2016-ம் ஆண்டு மூன்றாவது குழந்தையையும் பெற்றார்.

அதிபர் கிம் உடனான திருமணத்துக்கு முன்பு 6 மாத காலம் சிறப்பு படிப்பு ஒன்றையும் ரீ முடித்ததாகக் கூறப்படுகிறது.

அதிபருடன் அழகுப் பொம்மையாக வலம் வரும் ரீ, ஒரு தங்கக்கூண்டு கிளியாக இருப்பார் என்றே தோன்றுகிறது! 

Next Story