காவிரி விவகாரம் : திரைத்துறை சார்பில் கண்டன போராட்டம் ரஜினி-கமல் பங்கேற்கின்றனர்
காவிரி விவகாரம் தொடர்பாக திரைத்துறை சார்பில் கண்டன போராட்டத்தில் ரஜினி-கமல் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #CauveryIssue #Rajinikanth #KamalHaasan
சென்னை,
ஆளும் கட்சியான அ.தி. மு.க. சார்பில் கடந்த 3-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டமும் நடந்தது. அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர், மாணவர்கள் என பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-நடிகைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டம் நடத்துகிறார்கள். இதற்காக அங்கு பந்தல் மற்றும் மேடை அமைக்கப்படுகிறது. காவிரி மற்றும் தமிழக பிரச்சினைகள் தொடர்பாக நாளை காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திரையுலகினர் கண்டன போராட்டம் நடத்த உள்ளனர். திரைத்துறை சார்பில் நடைபெற உள்ள கண்டன போராட்டத்தில் ரஜினி - கமல் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story