தி.மு.க. நடத்தும் காவிரி உரிமை மீட்பு பயண விவரம் வெளியீடு


தி.மு.க. நடத்தும் காவிரி உரிமை மீட்பு பயண விவரம் வெளியீடு
x
தினத்தந்தி 8 April 2018 4:00 AM IST (Updated: 8 April 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. சார்பில் நடத்தப்படும் காவிரி உரிமை மீட்பு பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. கடந்த 1–4–2018 அன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, டெல்டா பகுதிகளில் ‘காவிரி மீட்புப் பயணம்’ குறித்து கலந்தாலோசித்து, டெல்டா பகுதி முழுவதும் காவிரி மீட்புப் பயணத்தை நடத்திடும் வகையில், இரு குழுக்களாக பிரிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என 6–4–2018 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், ஒருமனதாக முடிவு செய்ததின் அடிப்படையில், 7–4–2018 அன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து ஒரு பயணம் தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து, வரும் 9–4–2018 அன்று (நாளை) அரியலூர் மாவட்டத்தில் இருந்து ஒரு குழுவின் பயணம் தொடங்கவிருக்கிறது. எனவே, ஏப்ரல் 7 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரு பிரிவாகத் தொடங்கும் காவிரி மீட்புப் பயணத்தை, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தொடங்கிவைக்க உள்ளார்.

இதில் 9–4–2018 அன்று (நாளை) அரியலூர் மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ள ‘‘காவிரி உரிமை மீட்பு பயணத்தில்’’ தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில், துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இக்காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், அனைத்து கட்சிகளின் தலைவர்கள், அந்தந்த கட்சிகளின் முன்னோடிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அனைத்துக் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்கவிருக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் காவிரி உரிமை மீட்பு பயண விவரம் வருமாறு:–

8–4–2018 அன்று (இன்று) காலை 7 மணிக்கு சூரக்கோட்டையில் புறப்பட்டு காசவளநாடுபுதூர், கோவிலூர், கா.தெக்கூர், ஈச்சங்கோட்டை, வடக்கூர் கிராமம், பொய்யுண்டார்கோட்டை, செல்லம்பட்டி, ஆதனக்கோட்டை, முதலிபட்டி, கருக்காடிபட்டி, வெட்டிக்காடு, சில்லத்தூர் கிராமம், அக்கரைவட்டம், ஊரணிபுரம், நம்பிவயல், ஏனாதி, ஆலடிக்குமுளை ஆகிய இடங்களை கடந்து செல்கிறது.

மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டையில் புறப்பட்டு சூரப்பள்ளம், செண்டாங்காடு, திட்டக்குடி, செம்பாலூர், ஆலத்தூர், முள்ளூர்பட்டிக்காடு, கண்ணுக்குடி கிழக்கு – மேற்கு, தொண்டராம்பட்டு, திருமங்கலக்கோட்டை, அருமுளை, ஒக்கநாடு கீழையூர், கீழவன்னிப்பட்டு, ஒக்கநாடு கிராமம், குலமங்கலம், தாந்தோணி, தலையாமங்கலம், சின்னபொன்னாப்பூர், மூர்த்தியம்மாள்புரம், சடையார்கோவில், வாண்டையார் இருப்பு ஆகிய இடங்களில் வழியாக செல்கிறது.

9–4–2018 அன்று (நாளை) காலை 7 மணிக்கு அன்னப்பன்பேட்டையில் இருந்து புறப்பட்டு மெலட்டூர், ஒன்பத்துவேலி, திருக்கருக்காவூர், இடைஇருப்பு, இரும்புத்தலை, சாலியமங்கலம், சூழியக்கோட்டை, அருந்தவபுரம், புத்தூர் ஆகிய இடங்களுக்கு செல்கிறது. மாலை 4 மணிக்கு அம்மாபேட்டையில் தொடங்கி செம்பியநல்லூர், அவளிவநல்லூர், குமாரமங்கலம், பெருங்குடி, அமராவதி, வெட்டாற்றுபாலம், ஆலங்குடி, நார்த்தாங்குடி, நீடாமங்கலம் ஆகிய இடங்கள் வழியாக செல்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story