காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ரெயில் மறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்களை மறித்து போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 104 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கண்டோன்மெண்ட் போலீஸ் சரக உதவி கமிஷனர் சச்சினாந்தம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக, நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு தலைமையில் கட்சியினர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலமாக திருச்சி கோர்ட்டு முன்பு இருந்து புறப்பட்டனர். பின்னர் அவர்கள் 4 குழுக்களாக பிரிந்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தினர்.
பின்னர், பலத்த பாதுகாப்பையும் மீறி அவர்களில் சிலர் ரெயில் நிலையத்தில் பயணிகள் போல் ரெயில் டிக்கெட் எடுத்தும், சிலர் கல்லுக்குழி வழியாகவும், சிலர் ரெயில்வே மேம்பால பணி நடைபெறும் இடத்தில் இருந்தும், பார்சல் அலுவலகம் வழியாகவும் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். அப்போது மதியம் 1 மணியளவில் 2-வது நடைமேடையில் திருச்சியில் இருந்து பாலக்காடு டவுனுக்கு புறப்படுவதற்காக பயணிகள் ரெயில் நின்று கொண்டிருந்தது. உடனே நாம் தமிழர் கட்சியினர் கைகளில் கட்சி கொடிகளுடன் ஓடி சென்று அந்த ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ரெயில் என்ஜின் மீது ஏறியும், தண்டவாளத்தில் அமர்ந்தும் கோஷங்களை எழுப்பினர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து அவர்களை ரெயில் நிலையத்தை விட்டு வெளியேற்றி அழைத்து வந்தனர்.
முதல் நடைமேடை வழியாக போலீசார் அவர்களை அழைத்து சென்றபோது, அந்த நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயிலை அவர்கள் திடீரென்று மறித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 104 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி கருமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story