காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 April 2018 4:15 AM IST (Updated: 8 April 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கக்கோரியும் குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கக்கோரியும் குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற பலர் கட்சிக்கொடிகளுடன் வந்து கலந்து கொண்டனர்.


Next Story