திருப்பூர் அருகே பா.ஜனதா கட்சி கொடி, பேனர் கிழிப்பு-தீ வைப்பு
திருப்பூர் அருகே பாரதீய ஜனதா கட்சி கொடி, பேனர்களை கிழித்து தீவைக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர்,
பாரதீய ஜனதா கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் பாரதீய ஜனதா கட்சி ஸ்தாபகர் தின விழா, 3-ம் மண்டல அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா ஆகிய முப்பெரும் விழா காங்கேயம் ரோடு, ராக்கியா பாளையம் பிரிவு அருகே நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. விழாவை யொட்டி காங்கேயம் சாலை உள்ளிட்ட பலபகுதி களில் பா.ஜ.க. கொடிகள், தோரணங் கள், பேனர்கள் கட்டப்பட்டி ருந்தன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் கட்சியின் புதிய கட்டிடம் அருகில் வைக்கப் பட்டிருந்த பேனர், தோரணங் கள், கம்பத்தில் கட்டப்பட்ட கொடிகள் ஆகியவற்றை இறக்கி கிழித்து தீவைத்துள் ளனர். அத்துடன் காங்கேயம் சாலை கன்னி மாரா ஓட்டல் அருகில் கட் டப்பட்ட கொடிகள், ஜெயநகர் 5-வது வீதி, பள்ளக்காட்டு புதூர் ஆட்டோ நிறுத்தம், வள்ளியம் மாள் நகர் டீக்கடை அருகில் கட்டப்பட்ட கொடி களையும் இறக்கி அறுத்துள் ளனர். இதுபோல் மொத்தம் 6 இடங்களில் செய்துள்ள னர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாரதீய ஜனதா கட்சியினர் நேற்று காலை புதிய அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி, ஈரோடு கோட்ட இணை பொறுப்பாளர் பாயிண்ட் மணி, ஆகியோர் தலைமையில் ஊரக போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதற்குள் புதிய அலுவலகத்தில் கட்சியினர் திரண்டனர்.
பின்னர் அவர்கள் ராக்கி யாபாளையம் நால்ரோட்டில், கொடிகளை கிழித்து எரித்தவர்களை போலீசார் உடனடியாக கைது செய்யக் கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அந்த பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரண மாக அந்தபகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் பருதுன்னிலா பேகம், சப்- இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோர் வந்து கட்சியின் பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்ற னர். இதை தொடர்ந்து கட்சி யின் 3-வது மண்டல புதிய அலுவலகத்தில் கூட்டம் நடந்தது.
பின்னர் கட்சியின் தேசிய தலைவர்கள் படங்களை கிழித்து அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்ட வர்களை போலீசார் உடன டியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் மாலை 3 மணி அளவில் நல்லூர் போலீஸ் நிலையத்தை பாரதீய ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல்கிடைத்ததும் தெற்கு போலீஸ் உதவி ஆணையாளர் தங்கவேல் கட்சி நிர்வாகிக ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துசெல்லும்படி வலியுறுத்தினார். இதை ஏற்க மறுத்த பாரதீய ஜனதா கட்சியினர் சிறிது நேரம் கோஷம் எழுப்பியபடி இருந் தனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டதால் கூடுதல் போலீ சார் அங்கு குவிக்கப் பட்டனர்.
அத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பஜிரா போலீஸ் வாகனமும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதன் கார ணமாக அங்கு பரபரப்பு நிலவியது. சிறிது நேரத்திற்கு பின்னர் பாரதீய ஜனதா கட்சியினர் அனைவரும் கலைந்துசென்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத் திற்கு சென்று மனு அளித்தனர்.
Related Tags :
Next Story