மீனவர்கள் மீது தாக்குதல்; ரூ.2 லட்சம் வலைகள்-பொருட்கள் கொள்ளை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்
கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த செருதூர் மீனவர்களை தாக்கி ரூ.2 லட்சம் வலைகள்-பொருட்களை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(வயது 40). மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்(40), சுந்தரவடிவேல்(35), வேலு(35), இளங்கோ(40) ஆகிய 4 பேரும் கடந்த 5-ந்தேதி காலை சுமார் 11 மணியளவில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் கோடியக்கரைக்கு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகுகளில் வந்த கடல் கொள்ளையர்கள், செருதூர் மீனவர்களின் படகை சுற்றி வளைத்து தாக்கினர். பின்னர் மீனவர்கள் வைத்திருந்த மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதனைத்தொடர்ந்து காயமடைந்த மீனவர்கள் அங்கிருந்து நேற்று காலை 9 மணிக்கு கரைக்கு திரும்பினர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து அவர்கள் செருதூர் பஞ்சாயத்தாரிடம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து காயம் அடைந்த 4 மீனவர்களையும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர், இலங்கை மீனவர்கள் தொடர்ந்து சிறைப்பிடிப்பதும், தாக்குதல் நடத்துவதும் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடல் கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை தாக்கி அவர்களிடம் உள்ள பொருட்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல அச்சப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை சம்பாத்தோட்டம் மீனவர்களை கடல் கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடம் இருந்து மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story