காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஒரே நாளில் 19 இடங்களில் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 19 இடங்களில் போராட்டம் நடந்தது. சாலை, ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்பு குழுவினர் 565 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் செங்கிப்பட்டி, திருப்பனந்தாள், ஒரத்தநாடு, சாலியமங்கலம், மருங்குளம் நால்ரோடு உள்ளிட்ட 8 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை வகித்தார். சுமார் 1 மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதில் 280 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பனந்தாள் கடைவீதியில் தமிழர்தேசிய பாதுகாப்பு இயக்கத்தினர் சாலை மறியல் நடத்தினர். ஒரத்தநாடு கடைவீதியில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதே போல் தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 12 பெண்கள் உட்பட 507 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பூதலுார் அருகே திருச்சியில் இருந்து தஞ்சை வந்த பயணிகள் ரெயிலை மறித்தனர். அதன்பின்னர் எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்தனர். இதன்பின்னர் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்தனர். இவ்வாறு தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக்குபவினர் 58 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன், விடுதலை தமிழ்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன், துணைத்தலைவர் அருண் மாசிலாமணி, சமவெளி விவசாயிகள் சங்க தலைவர் பழனிவேல்ராஜன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி உழவர் பேரியக்க தலைவர் தங்கராசு உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று 8 இடங்களில் சாலை மறியல் போராட்டமும், 4 இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும், 1 இடத்தில் உண்ணாவிரத போராட்டமும், 2 இடங்களில் முற்றுகை போராட்டமும், 4 இடங்களில் ஆர்ப்பாட்டமும் என ஒரே நாளில் 19 இடங்களில் போராட்டம் நடந்தது. இதில் சாலை மறியல் மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 565 பேர் கைது செய்யப் பட்டனர்.

Related Tags :
Next Story