கூட்டுறவு சங்க தேர்தலில் ஓட்டு பெட்டியை உடைத்ததால் பரபரப்பு
ஆண்டிமடம் அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் ஓட்டு பெட்டியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் ஜெ.குளத்தூர் கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் 11 நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவிக்கு, 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று கூட்டுறவு சங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 76 வாக்காளர்களில் மதியம் வரை 63 பேர் வாக்களித்து இருந்தனர்.
இந்நிலையில் திடீரென சிலர் தேர்தல் நடக்கும் அறைக்கு சென்று ஓட்டு பெட்டியை தூக்கி வீசி உடைத்தனர். மேலும் அதில் இருந்த வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் கிழித்து எறிந்தனர். இதுகுறித்து அறிந்ததும் அங்கு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தேர்தல் அதிகாரி காந்தி, தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்திவைத்தார். இதுகுறித்து அதே ஊரை சேர்ந்த சங்க உறுப்பினர் செல்வராஜ் என்பவர் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு கூறியதன் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
அதன்பின்னர் ஆண்டிமடம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜமூர்த்தி தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா, பால்வளத்துறை முதுநிலை ஆய்வாளர் கார்த்திகேயன், ஆவின் விரிவாக்க அலுவலர் காமராஜ், உதவி தேர்தல் அதிகாரி தினேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை முடிவில் தேர்தலுக்கான தேதியை பின்னர் அறிவிப்பது என்றும், பதவி காலம் முடியும் வரை பழைய நிர்வாகிகள் தொடர்ந்து பொறுப்பில் இருப்பது என்றும், அதுவரை சங்க செயல்பாடுகளை சங்க செயலாளர் கவனிப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

Related Tags :
Next Story