100 அடி ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு: வியாபாரிகள், பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
புதுவை 100 அடி ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 100 அடி ரோடு, அரும்பார்த்தபுரம் ஆகிய பகுதிகளில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 100 அடி ரோட்டில் ஒரு பகுதியில் பாலம் அமைக்கும் பணி முடிவடைந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலத்துக்கான பணி முடியும் நிலையில் உள்ளது.
இந்த பாலம் கட்டத் தொடங்கிய போது இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வசதியாக ரெயில்வே தண்டவாளத்தின் அடியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சர்வே எடுக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மீண்டும் சர்வே நடத்தி சுரங்கப்பாதை அமைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர். இது பற்றிய தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல்ரகீம் தலைமையில் வியாபாரிகளும், ஜான்பால்நகர், ராகவேந்திரா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் அங்கு வந்தனர். சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென்று அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்து முதலியார்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘சுரங்கபாதை அமைப்பதால் இங்குள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படும். ஜான்பால் நகர் பகுதிக்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளை சந்தித்து பேசும்படியும், சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தற்போது நிறுத்தி வைப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story