வீடுகளில் புகுந்து கைவரிசை: கொள்ளையர்களின் கூட்டாளி கைது
காரைக்காலில் வீடுகளில் கைவரிசை காட்டியதாக கைதான 3 பேர் கைதான நிலையில் இவர்களது கூட்டாளியும் கைது செய்யப்பட்டார்.
காரைக்கால்,
காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் கடந்த வாரம் பாரதியார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் மேலும் சந்தேகமடைந்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரித்தனர்.
இதில் அவர்கள் புதுச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (வயது 26), தஞ்சாவூர் வினோத்(24), கும்பகோணத்தை சேர்ந்த மற்றொரு விக்னேஷ்(23) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும், தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ்(27) என்பவருடன் சேர்ந்து கடந்த ஒரு மாதமாக காரைக்கால் மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஆள் இல்லாத வீடுகளை குறி வைத்து அங்கு கொள்ளையடித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், எல்.இ.டி. டி.வி. மற்றும் 8 பவுன் தங்க நகைகள், 40 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களின் கூட்டாளி ரமேசை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காரைக்கால் பஸ் நிலையம் அருகே சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது ஏற்கனவே வீடுகளை குறிவைத்து திருடியதாக தேடப்பட்டு வந்த ரமேஷ் என்பதும், தனது கூட்டாளிகள் கைதானது தெரியாமல் அவர்களை தேடிக் கொண்டு வந்தபோது போலீசில் சிக்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம், 9 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story