19 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


19 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 8 April 2018 3:45 AM IST (Updated: 8 April 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 19 ஏரிகளில் வண்டல் மண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,


தற்போது ஏற்பட்டு உள்ள கடும் வறட்சியினை சமாளிக்கும் பொருட்டு நீண்டகால தீர்வு நடவடிக்கையாக ஏரிகளின் கொள்ளளவினை ஆழப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளும் விதத்தில் நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் இருந்து வேளாண் நோக்கத்திற்காக இலவசமாக வண்டல் மண் எடுத்து கொள்ள அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி நாமக்கல் தாலுகாவில் உள்ள பாச்சல், எஸ்.நாட்டாமங்கலம், எடையப்பட்டி, தூசூர், அரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏரிகளிலும், பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள எஸ்.வாழவந்தி ஏரி, இருட்டணை ஏரியிலும் விவசாயிகள் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து கொள்ளலாம்.


சேந்தமங்கலம் தாலுகாவில் பழையபாளையம் மற்றும் சிவநாய்க்கன்பட்டி ஏரி, ராசிபுரம் தாலுகாவில் உள்ள பட்டணம் ஏரி, காக்காவேரி ஏரி, நடுப்பட்டி ஏரி, மின்னக்கல் ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, தொப்பப்பட்டி ஏரி மற்றும் திருச்செங்கோடு தாலுகாவில் கவுண்டன்பாளையம் ஏரி, மல்லசமுத்திரம் சின்னஏரி, பருத்திப்பள்ளி ஏரி, புத்தூர் பெரியஏரி ஆகியவற்றிலும் என மாவட்டம் முழுவதும் உள்ள 19 ஏரிகளில் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் நன்செய் நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 25 டிராக்டர் லோடுகளுக்கு மிகாமலும் (75 கனமீட்டர்), புன்செய் நிலம் ஏக்கர் ஒன்றிற்கு 30 டிராக்டர் லோடுகளுக்கு மிகாமலும் (90 கனமீட்டர்) வண்டல் மண் எடுத்து, விவசாய நிலங்களை அபிவிருத்தி செய்ய விண்ணப்ப படிவத்தை சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பின்னர் மனுதாரரின் விவசாயநிலம் மற்றும் ஏரி ஆகியவை அந்த வருவாய் கிராமம் அல்லது அருகில் உள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்துள்ளது என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து இலவசமாக வண்டல் மண் பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story